Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உழவு இயந்திரம் மூலம் தாக்கி பொலிஸார் கொலை – யாழில் அதிர்ச்சி சம்பவம்!

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.

பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.

உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று , சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த இளைஞனை பாலாவி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , சம்பவ தினத்தன்று , உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வருவதாக தெரிவித்தனர்.

முந்தைய செய்தி மாணவனுக்கு சிகிச்சை மறுப்பு விவகாரம்: இளவாலை வைத்தியசாலையில் அதிர்ச்சி தகவல்கள்!
அடுத்த செய்தி மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொள்ளுப்பிட்டியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

ஜனவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திகாமடுல்ல மாவட்டம் – அம்பாறை நகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்சினிமா

தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிகர் தனுஷ்!

ஜூன் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?