Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை அதிபரை மாற்ற கோரிக்கை

மார்ச் 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும், பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை பாடசாலைக்கு முன் பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த சில வருடங்களாக ஆசிரியர் ஒருவர் அதிபராக செயல்படும் நிலையில் பாடசாலை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளதாகவும் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் வேறு பாடசாலைகளுக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் பாடசாலை சூழலில் பல்வேறு பின்னடைவுகளை எதிர் நோக்குவதாகவும் சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப் பட்டதோடு, குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றக் கோரியும் முதலாம் தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கா விட்டால் தமது பிள்ளைகளை உடனடியாக குறித்த பாடசாலையில் இருந்து நிறுத்தப் போவதாகவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக்கோரியும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு, தரம் ஒன்றிற்கான அதிபரை நியமிக்குமாறும் அரச அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை மற்றும் கடிதம் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்த்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாடசாலைக்கு முன் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மன்னார் வலைய கல்வி அலுவலக அதிகாரிகள் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உரிய அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வலய கல்விப் பணிப்பாளரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .

வலயக்கல்வி பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை நிறை வேற்றுவதாகவும், அதற்கான கால அவகாசம் தேவை எனவும் தமது அதிகாரத்திற்குள் குறித்த பாடசாலை இல்லை என்பதையும் ஆனால் இதற்கான நடவடிக்கையை தாம் உரிய அதிகாரிகளுடன் பேசி சாதகமானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிப்பதாக தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை தருமாறு தெரிவித்திருந்தார்.

முந்தைய செய்தி நீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது – சந்தன பண்டார
அடுத்த செய்தி இஸ்ரேல் பிரதமரை சாடிய “எலிசபெத் மே”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவினுள் வேண்டாம் – கௌரி பொன்னையா(Video)

டிசம்பர் 18, 2025
இலங்கை

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை

டிசம்பர் 9, 2025
இலங்கை

போக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று இரவு வியட்நாமுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?