தற்போது உயர்மட்ட வெப்பநிலை நிலவுவதால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் நீர் கட்டணம் உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
ஆனால் நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்ய போவதில்லையென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்டண திருத்தமானது வருடத்திற்கு இருமுறை நடைபெறுவதுடன், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படுவதில்லை.
நீர் வழங்கல் சபையின் மொத்த இயக்க செலவுகளில் 20% முதல் 30% வரை மட்டுமே மின்சாரத்திட்காக செலவிடப்படுகின்றது என கூறினார்
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு பின்னரே நீர் கட்டணம் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
