நாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாளைய தினம் (31) பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு புதன்கிழமை காலை 8 வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியர்களுக்கான ஊதிய பற்றாக்குறை, இடமாற்ற பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வை பெற்று தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர்கள் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.
ஆதலால் இந்த பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
