இன்றைய நிலவரப்படி நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை அதிக கேள்வி எழுந்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கறிமிளகாய் 300 ரூபாய்க்கும், ஒருகிலோ தக்காளி 750 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கோலி பிளவர் 950 ரூபாய்க்கும், புரோக்கோலி ஒரு கிலோகிராம் 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவா ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கரட் ஒரு கிலோ 310 ரூபாய்க்கும் , உருளைக்கிழங்கு ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
