வவுனியா பல்கலைக்கழகத்தில் நான்காவது தொலைதூர வெளிவாரி கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் பல்கலைக்கழக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஊடகம் மற்றும் இதழியல் கல்வியினை கற்ற மாணவர்களினால் ஊடகி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதிகள், வளவாளர்கள், மற்றும் கற்கைநெறி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
