Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ். பல்கலையில் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமனம்

மார்ச் 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 05ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:

பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்), இ.பத்மநாதன் (முன்னாள் பிரதம செயலாளர் – நிதி), ஏந்திரி எஸ்.வினோதினி (பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்), ஏந்திரி. ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்), வைத்திய நிபுணர் என். சரவணபவ மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்), ஷெரீன் அபதுல் சரூர் ( எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளர்), கலாநிதி எம். அல்பிரட் (முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்), ஏந்திரி அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்).

மேலும் என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி, சட்டபீடம், கொழும்பு), வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், வட மாகாண தொழிற்றுறை திணைக்களம்), டி. கே.பி.யூ. குணதிலக (முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின்சார சபை), எம். ஜே. ஆர். புவிராஜ் (முன்னாள் பணிப்பாளர், திறைசேரி), பேராசிரியர் சி.சிவயோகநாதன் (வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்), பி.ஏ.சரத்சந்திர (முன்னாள் அரச அதிபர், வவுனியா), க.பிரபாகரன் (சட்டத்தரணி), ஏ.எம்.பி.என். அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்.)

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும்.

பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்டதாரியாக இருத்தல் வேண்டும். அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியுடன், பால்நிலை சமத்துவம், சமய ரீதியான பிரதிநிதித்துவத்துடன், சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனையுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முந்தைய செய்தி வடக்கின் பெண் உற்பத்தியாளர் விழா.
அடுத்த செய்தி நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

மார்ச் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் சைக்கிள் மீது மோதிய லொறி

மே 18, 2026
இலங்கை

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு(Video)

டிசம்பர் 7, 2025
இலங்கை

பலவத்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?