Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பூகோள ஆதிக்கத்தில் இன்று வரையும் தமிழர்கள் அடிமைகள் – த.சுரேஸ் தெரிவிப்பு

மார்ச் 19, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

இலங்கைத்தீவு பூகோள ஆதிக்கத்தில் சிக்குண்டு இருப்பதனால் வருகின்ற வல்லரசுகளாலும் இந்த நாட்டை ஆளுகின்ற அரசுகளாலும் இன்று வரையும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக எந்த தலைமைத்துவம் முன்நிற்கின்றதோ அந்த தலைமைத்துவத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தெரிவித்தார்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதம் இன்று வியாழக்கிழமை (19) ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தீவில் சிங்களவர்களால் தமிழர்களை அடக்கி ஒடுக்கிய வேளை தமிழர்கள் தாயக நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அப்போது பல போராட்ட இயக்கங்கள் மற்றும் அமைப்புக்கள் குரல் கொடுத்து இந்திய அரசுக்கு எடுத்து கூறினர்.

அப்போது இலங்கையில் ஒரு அமைதியை நிலை நாட்டுவதற்காக இந்திய வல்லரசு ஜபிகே என்ற இராணுவத்தை அனுப்பி சமாதானத்தை நிலைநாட்டுவதாக வந்து எங்களது மக்களை அவர்கள் வந்து நோக்கத்துக்கு எதிர்மாறாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி செயற்பட்டனர்.

அந்த காலப்பகுதியில் தமிழர்களுக்காக உறுதியாக நின்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து. அதன்போது புலிகளுக்கும் இந்திய வல்லரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு ஒரு ஆயுத போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்து துன்புறுத்தி கற்பழித்து படுகொலை செய்தனர். எனவே அந்த நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட போராட்டங்கள் தமிழ் தாயகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்தது .

அப்போது மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி தலைவராக இருந்த அன்னை பூபதி 2 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிர போராட்டம் 1988 மார்ச் 19ம் திகதி ஆரம்பித்தார் 32 நாட்கள் இருந்து தன்னுடைய உயிரை தியாகம் செய்தார்.

இவ்வாறு உயிர் தியாகம் செய்து தாயகத்தில் இளைஞர்கள் யுவதிகள் அடிமனதில் போராட்ட வேண்டிய உறுதி தன்மையை ஏற்படுத்தியிருந்த அவர் தமிழ் தேசத்தினுடைய தாயாக இருந்து மக்களின் இருப்புக்காக செயற்பட்டு முன்னிலையாக பேசும் பொருளாக இருந்து உலக அளவில் தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என தியாகதீபம் திலீபனை தொடர்ந்து அன்னை பூபதியின் தியாகங்களை தொடர்ந்து இந்த மண்ணிலே பல போராட்டங்கள் வெடித்து பெயர் சொல்லுமளவிற்கு இன்று இந்த இலங்கை தீவில் எங்கள் இனம் வாழுகின்றது.

ஆகவே இந்த போராட்டங்கள் எவ்வாறு இருந்தாலும் இந்தபூகோளஆதிக்கத்தில் இந்த இலங்கை தீவு சிக்குண்டு இருப்பதனால் வருகின்ற வல்லரசுகளாலும் இந்த நாட்டை ஆளுகின்ற அரசுகளாலும் தொடர்ச்சியாக கையாளப்பட்டு இதுவரைக்கும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு வருகின்றனார்.

எனவே இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இன்று தமிழ் மக்கள் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம் பூகோள ஆதிக்க போட்டி என்பது உச்சகட்ட நிலையை அடைந்திருக்கின்றது.

எனவே வருகின்ற சந்தர்பங்களை சரியான விதத்திலே தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் அதற்கு சரியான அரசியல் தலைமைத்துவம் சரியான முறையில் செயற்பட்டால் மட்டும் தான் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்ற முடியும்.

அந்த அடிப்படையில் எங்களது போராட்டம் என்பது எவ்வாறான பூகோள ஆதிக்க போட்டிகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய தேசம் சுயநிர்ணய உரிமை, இறைமையின், அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்று முகமாக எந்த தலைமைத்துவம் முன்நிற்கின்றது அந்த தலைமைத்துவத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் தான் இப்படிப்பட்ட தியாகங்களுக்கு பரிகாரமாகும் என்றார்.

முந்தைய செய்தி வடக்கிலுள்ள சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
அடுத்த செய்தி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ரமலான் மாதச் சிறப்பு நிகழ்ச்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் பல கோடி ருபாய் மோசடி

ஜனவரி 8, 2026
இலங்கை

கனடாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நால்வரை தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
இலங்கை

கார் மோதியதில் இரு எருமை மாடுகள் உயிரிழப்பு.

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?