மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு QR முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி QR முறைமையின் கீழ் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றையதினத்தில் QR முறைமையை பயன்படுத்தாத புதிய வாகனங்கள் 439,997 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனன.
QR முறையை பயன்படுத்தி 5,094,566 பேர் எரிபொருளை பெற்றுக் கொள்வதோடு, QR முறைமை தற்போது 95 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீர ரத்ன தெரிவித்துள்ளார்.
