வளமான தேசத்திற்கு உற்பத்தி திறன்மிக்க கிராமம் கிளின் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமத்திட்டத்தின் கீழ் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் முதலியார்குளம் கிராம உத்தியோகத்தரின் பிரிவில் முதலியார்குளம் கிராமத்தை சமூக உற்பத்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜனி அவர்களின் வழிகாட்டலில் உதவிப்பிரதேச செயலாளர் இராதகிருஸ்ணன் ஆனந் தலைமையில் நடைபெற்றது.
உற்பத்தி திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டு செல்லுதல் எனும் கருப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி திட்டமிடப்பணிப்பாளர் ம.தவமலர் கிராம தலைமை உத்தியோகத்தர் இ.தேவகி உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹெ.டிலக்சன் பீரிஸ் மற்றும் கிராம அலுவலர் சமூகவூட்டல் உத்தியோகத்தர் சமுர்தி உத்தியோகத்தர் பிரதேச செயலக அலுவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரின் இணைப்பாளர் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரஜா சக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
