Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜனாதிபதி அநுர 50 சதவீத வாக்குகளைப் கூட பெறவில்லை – புத்திக பத்திரன

மார்ச் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்தார்கள். வடக்கு கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும், அதுபோலவே தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏனைய பல பிரதேசங்களிலும் 2024 இல் மாத்திரமல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டிலும் மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முடிவுகள் வேறுவிதமாக அமைந்தன. அதன் காரணமாக எம்மால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனது.

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதியாகவே அவர் தெரிவு செய்யப்பட்டார். 43 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் அடைந்த வெற்றியானது ஒரு கௌரவமான வெற்றியாகக் கருத முடியாது.

பொதுத் தேர்தலின் போது வடக்கில் ஆசனங்களை பெற முடியவில்லை. உண்மையில் வடக்கில் மாத்திரமல்ல, இலங்கை முழுவதிலும் நாம் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது கடந்த தேர்தலின் விளைவு மட்டுமல்ல, இலங்கைக்கு ஜனாதிபதித் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொட்டே நிலவி வரும் ஒரு அரசியல் போக்காகும்.

உதாரணமாக, 1982 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் அவருக்குச் சார்பாகவே அமைந்தன. 1988 டிசம்பர் 19 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச அவர்கள் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 125 ஆசனங்களைப் பெற்றது.

1994 இல் பொதுத் தேர்தல் முதலில் நடைபெற்றது. சந்திரிகா குமாரதுங்க அவர்கள் கஷ்டப்பட்டு ஒரு அரசாங்கத்தை அமைத்தார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் இலட்சக்கணக்கான பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் நடைபெறும் போது, முதல் தேர்தலின் முடிவுகள் இரண்டாவது தேர்தலின் முடிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பொதுத் தேர்தலில் இவ்வாறான ஒரு முடிவு எங்களுக்குக் கிடைத்தது.”

முந்தைய செய்தி அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம் – ரஞ்சித் மத்தும பண்டார
அடுத்த செய்தி யாழ். பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலை மின்உற்பத்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கருத்து!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு உதவிய 7 பேர் கைது!

அக்டோபர் 21, 2025
இலங்கை

கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% ஆக அதிகரிப்பு

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?