Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம் – ரஞ்சித் மத்தும பண்டார

மார்ச் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் சாதகமான முடிவுகளை எம்மால் வழங்க முடியும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அது உள்நாட்டு அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது சர்வதேச விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையின் அரசியலோடு தொடர்புடையவை. எனவே, எமது பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆயினும், நாம் இன்னும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்த ஆட்சியில் நிலவும் ஊழல்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல செயல்பாடுகளுடன் நாங்கள் ஒருபோதும் உடன்படப் போவதில்லை.

அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொதுத் தளத்தை உருவாக்க முயல்கிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன, அவை குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சியினர் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்ற எண்ணம் உள்ளது அது முற்றிலும் தவறானது. கடந்த சில வாரங்களாக முக்கிய ஊடகங்களைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், எமது மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஊடாக பல போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் எமது எதிர்க்கட்சித் தலைவர் போராட்டக் களங்களுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் கீழ் அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். நாடாளுமன்றத்தை ஒரு போராட்டக் களமாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.”

“தேசிய பாதுகாப்பு மற்றும் தற்போதைய சூழல் குறித்து எமது எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியுள்ளார். அதுவே எமது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும். ஜனாதிபதி தற்போது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்.

ஆனால் எமக்கு ஒரு நிலையான கொள்கை உண்டு. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் எப்போதும் போதுமான கையிருப்பு இருப்பதாகவே கூறி வருகிறது. ஆனால் திடீரென விலையை உயர்த்துகிறார்கள். போதுமான கையிருப்பு இருந்தால் ஏன் விலையை உயர்த்த வேண்டும்? இது ஒரு பெரிய கேள்வி. எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. அது அந்த நெருக்கடியின் ஆழத்தைப் பொறுத்தே அமையும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி ரஷ்யாவின் நிழல் கப்பற்படை மீதான தடையைத் தளர்த்த முடியாது என்கிறார் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி ஜனாதிபதி அநுர 50 சதவீத வாக்குகளைப் கூட பெறவில்லை – புத்திக பத்திரன

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை!

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா குப்பை மேட்டுபிரச்சனை – பிரதியமைச்சர் தலைமையில் ஆராய்வு

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு – மூவர் கைது

பிப்ரவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வேப்பங்குளத்தில் அரச ஊழியர்கள் போராட்டம்

அக்டோபர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?