ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில், 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று 29ஆம் திகதி குறித்த பிணை மனுவை நிராகரித்துள்ளது.
இந்த நிலையில், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

