கனடாவின் Quebec மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயல் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான Hydro-Québec வாடிக்கையாளர்கள் இன்று மின்சாரம் இன்றி உள்ளனர்.
மின்சாரத் தடையால் மற்றும் மோசமான சாலை நிலைமைகளால் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதில் Lester B. Pearson School Board, Centre de services scolaire des Patriotes மற்றும் New Frontiers School Board ஆகியவை அடங்கும்.
Montreal மற்றும் Montérégie பகுதிகளில் அதிகளவில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மொன்றியலில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன.
இதற்கிடையில் Réseau express métropolitain (REM) லைட் ரெயில் சேவையும் பனிக்கட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தற்காலிகமாக Shuttle bus சேவை இயக்கப்படுகிறது.
இந்நிலையில், Hydro-Québec நிறுவனத்தின் 550 பழுது பார்க்கும் குழுக்கள் மின்சாரத்தை விரைவாக மீட்டெடுக்க பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் freezing rain தொடர்ந்து இருக்கும் எனவும் வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
