அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான கனடியர்களை மீட்கும் பணிகளைப் பிரதமர் மார்க் கார்னியின் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தவிக்கும் கனடியர்களுக்காக அடுத்த 72 மணிநேரத்திற்குள் சிறப்பு ‘சார்ட்டர்’ (Chartered) விமானங்கள் இயக்கப்படும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் சுமார் 1,170 கனடியர்கள் தாயகம் திரும்ப உதவி கோரியுள்ளனர்.
இவர்களை மீட்பதற்கான விமானங்களை இயக்க அந்நாட்டு அரசின் அனுமதியை, கனடா கோரியுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் பல நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஓமன் (Oman) நாட்டின் வான்வழியைப் பயன்படுத்திக்கொள்ள கனடா ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
