சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்திய ஒருவிடயம் தான் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றநிலை.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதல் தொடர்பில் கனடா பிரதமர் மார்க் கார்னி கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றநிலையில் கனடா இராணுவம் ஒரு போதும் பங்கேற்காது என அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.
எதிர்காலத்திலும் கனடாவின் இராணுவம் இவ்வாறான செயற்பாடுகளில் இணையாது என்றும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் தங்களை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய கிழக்கில் உள்ள கனேடியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கேட்டு செயற்படுமாறு அறிவித்துள்ளார்.