மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம் , மாற்றுச் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி வலிகாமம் பிரதேச சபைக்கு முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு நிறத்திலான பதாகைகளை தாங்கியவாறு பிரதேச சபை உறுப்பினர்கள் அமர்வுக்கு செல்ல முன்னர் இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம் ,மாற்றுச் சட்டமும் வேண்டாம் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஸ் தலைமையில் உறுப்பினர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
