Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

ஜூலை 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான “மரபுரிமைப் பயணம்” நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணக் கோட்டை முனீஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து, நாளைய தினம் வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில் பயணம் ஆரம்பமாகி , துணைவி பிரகேஸ்வரன் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம், சாவகச்சேரி வாரிவரனேஸ்வரம் மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று இறுதியாக பூநகரி மண்ணித்தலை சிவாலயம் சென்றடையவுள்ளது.

குறித்த பயணத்தில் இணைபவர்களுக்கு , போக்குவரத்து வசதிகள் , உணவு உபசாரங்கள் வழங்கப்படவுள்ளது.

இப்புனித சிவ தரிசனப் பயணத்தினை தொல்லியல் திணைக்களம், வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் இராஜ இராஜேந்திர சுவாமிகள் ஆகியோர் இணைந்து மிகச் சீராக ஒழுங்கமைத்துள்ளனர்.

சோழர் காலத்து ஆன்மீகப் பெருமையையும், நமது பாரம்பரிய மரபுரிமைகளையும் போற்றிப் பாதுகாக்கும் இந்த வரலாற்றுப் பயணத்தில் ஆன்மீகப் பற்றாளர்களையும், பொதுமக்கள் அனைவரையும் அன்போடு கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி மாணவர்களுக்கு தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்
அடுத்த செய்தி நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடும் ரயில் என்ஜின் சாரதிகள்

பிப்ரவரி 17, 2026
இலங்கை

நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை!

அக்டோபர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பம்

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூன் 2026

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?