பிரதமர் Mark Carney எதிர்வரும் 26ம் திகதி இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லியில், இந்திய பிரதமர் Narendra Modi உடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பில் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு துறை கூட்டாண்மை, மற்றும் Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் புதுமை தொழில்நுட்ப துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துதல் ஆகியவை இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும் பாதுகாப்பு துறையில், ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த பயணம், கனடா – இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய பயணமாக பார்க்கப்படுகிறது.
