மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு தனது கனேடியர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கடுமையான வன்முறைச் சூழல் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் தேடப்பட்டு வந்த ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) கார்டெல் அமைப்பின் தலைவரான ‘எல் மென்ச்சோ’ (El Mencho), மெக்சிகோ ராணுவத்தின் சிறப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோவின் பல மாநிலங்களில் தீவைப்பு, துப்பாக்கிச் சூடு மற்றும் சாலை மறியல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடியச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான ‘புவேர்ட்டோ வல்லார்ட்டா’ (Puerto Vallarta) உள்ளிட்ட கடலோர நகரங்களில் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையிலேயே, கனேடியர்கள் மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது.



