Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

நாட்டை விட்டு தப்பியோடினார் வங்கதேச பிரதமர் !

ஆகஸ்ட் 5, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கதேசத்தில், சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையனையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில்தான், டாக்கா அரண்மைனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சகோதரியான ஷேக் ரெஹனாவுடன், ஷேக் ஹஸீனா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபாபனை விட்டு, ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்குமாறு ராணுவத்துக்கு ஷேக் ஹஸீனாவின் மகன் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால்தான், தனது பதவியைவிட்டு விலகி, உயிருக்கு ஆபத்து வரலாம் என்கிற காரணத்தால் அவர் நாட்டைவிட்டு தப்பியோட முயற்சித்தார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதை வங்கதேச ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜாமான் நாட்டு மக்களிடையே உரையாற்றி உறுதி செய்தார்.

அவர் மேலும் கூறுகையில், “அரசியல் மாற்றம் நடந்து வருகிறது. இடைக்கால அரசாங்கம் நிறுவப்படும். அனைத்து கொலை வழக்குகளும் விசாரிக்கப்படும். தேசத்தின் முன்னேற்றத்தைக் காப்பதற்கு மோதலுக்கு பதிலாக ஒத்துழைப்பே முக்கியமானது. குடிமக்கள் அமைதியைப் பேணவேண்டும். வன்முறையைத் தவிர்த்துவிட்டு நாட்டின் நல்வாழ்வைத் தக்கவைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி ஒருநாள் தொடரிலிருந்து மதிஷ பத்திரன விலகல்.
அடுத்த செய்தி பிக்சல் 9 சீரிஸ் அறிமுகம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செவ்வந்தி தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சங்கிலியன் பூங்காவை அழிக்கும் செயற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகம் – சீ.வீ.கே. குற்றச்சாட்டு!

அக்டோபர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?