Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சங்கிலியன் பூங்காவை அழிக்கும் செயற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகம் – சீ.வீ.கே. குற்றச்சாட்டு!

அக்டோபர் 19, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

நல்லூர் சங்கிலியன் பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில், பூங்கா அமைந்துள்ள காணியை நல்லூர் பிரதேச செயலகம் தனது தேவைக்கு கையகப்படுத்த எத்தனிப்பதாகவும் , அதற்கு பின்னால் மறை கரங்கள் உள்ளன என தான் சந்தேகிப்பதாகவும் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் ,
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாக அமையப் பெற்றதே மேற்குறிப்பிட்ட “நல்லூர் சங்கிலியன் பூங்கா”.

1989 வரை செம்மணி வீதி என் பது அதற்கு வடக்காக அமைந்துள்ள தேவாலயத்துக்கு எதிராக பருத்தித் துறை வீதி வரையானதாக இருந்தது. இதற்கு தெற்காகவும், பருத்தித்துறை வீதிக்கு கிழக்காகவும் முத்திரை சந்தையும், மாநகர சபையால் வடகைக்கு கொடுக்கப்பட்ட கடைகளும் இருந்தன.

1989 இல் பருத்தித்துறை வீதியில் இருந்து தேவாலயத்துக்கு நேராகச் சென்ற செம்மணி வீதியின்  பகுதி தெற்குப் பக்கமாக இருந்த தனியார் காணிகளை தெற்கு எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளபடி செம்மணி வீதி மாற்றப் பட்டு, நேரான வீதியாக அமைக்கப்பட்டது.

இதனால் இந்த செம்மணி வீதியின் வடக்காக செட்டியார் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியை வடக்கு எல்லையாகக் கொண்ட காணியாக ஒன்றி ணைக்கப்பட்டது. இந்த முழுக் காணியும் மாநகர சபையின் ஆட்சியின் கீழ் இருந்து வருவது வரலாறு.

வெளி நிலமான முத்திரைச் சந்தைப் பகுதியில் மன்னன் சங்கிலியனின் பெயர் நீண்டு நிற்க வேண்டும் என்ற எண்ணத்தின்படியே, செம்மணி வீதியை இடம் மாற்றி முழுப் பகுதியையும் ஒன்றியைத்து “சங்கிலியன் பூங்கா” 1989 இல் அமைக்கப்பட்டது. அது மாநகர நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் இந்த நிலம் மாநகர சபைக்கு உரித்தானது அல்ல என்ற தோரணையிலும் அது அரச காணி (State Land) என்ற தோரணையிலும் இங்கு நல்லூர் பிரதேச செயலகம் அமைப் பதற்கு அனுமதி கோரி தங்களுக்கு  சமர்ப்பித்த கோரிக்கையின் பேரில் கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்ற தாக ஊடகச் செய்தி மூலம் அறிய வந்தது. இது மிகுந்த அதிர்ச்சியை தந்தது.

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு நல்லூர் கந்தசுவாமி ஆல யத்தினால் வழங்கப்பட்ட குத்தகை 25 அல்லது 30 வருடம் என்றும் ஏற்கனவே அதில் 15 அல்லது 20 வருடங்கள் சென்றுவிட்டதாகவும், நல்லூர் கோவில் நிர்வாகம் கால நீடிப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரி விக்கப்பட்டதாக தெரிய வந்தது. இவை முழுவதுமே உண்மைக்கு புறம் பானவை.
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு அதன் கட்டடம் அமைந்துள்ள 10 பரப்பு காணியை மாநகர சயைின் குத்தகையில் இருந்து நீக்கி 01.05.2005 ஆம் திகதியில் இருந்து 50 வருடக் குத்தகையை நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததே நான்தான். அதில் சாட்சியாக நானே ஒப்பமிட்டிருப்பதையும் காணலாம். குத்தகைக் காலம் இன்னும் 30 வருடங்கள் இருக்கையிலும், குத்தகை முடிவுக் காலத் தில் அதனை நீடிப்பதற்கான ஏற்பாடு உடன்படிக்கையிலேயே உள்ளடக்கப் பட்டு இருக்கையிலும், சங்கிலி மன்னனின் பெயரில் அமைந்த பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில் இந்தக் காணியை தமக்கு வழங்குமாறு கோரும் நோக்கம் புரிந்து கொள்ள முடியாதததும், ஏற்றுக் கொள்ள முடியாதது மாகும்.
இதன் பின்னணியில் ஏதாவது மறைகரங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதே.
இதில் எனக்கிருந்த மிகப் பெரிய ஆச்சரியம் மாநகர சபை நிர்வாகமும் தெளி வற்று குழம்பியிருந்தமையாகும். கடந்த 13.10.2025 அவர்களுடன் கலந்துரை யாடி முழு வரலாற்று விபரங்களையும் நான் தெளிவுபடுத்தியதன் அடிப்படை யில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமது ஆட்சி உரித்தில் இருந்த இந்தக் காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைத்து பூங்காவை மேம்படுத்த யாழ். மாநகர சபை 14.10.2025 ஆம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது.
முந்தைய செய்தி யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் 21வயது இளைஞன் கைது!
அடுத்த செய்தி சாவகச்சேரியில் போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி ஒருவர் பலி

ஜூலை 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அபிவிருத்திகள் அந்த மண்ணின் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் – ஆளுநர் வலியுறுத்தல்

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – புதிய வேட்பாளர் அறிமுகம்.

ஜூன் 29, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?