பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸ் உத்தியோகர்த்தருக்கும் இடையிலே இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது .
இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இரு உத்தியோகத்தர்களுக்கு இடையில் ஏட்பட்ட வாய்த்தர்க்கத்தால் அதில் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
காயத்திற்குள்ளானவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிறகு சிகிச்சைக்காக டிக்கோயா க்ழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
