கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் என்று இன்று01.02.2026 அதிகாலை3.00 அனுமதி பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகத்தை தருமபுர பொலிசார் வீதி சோதனை இட முற்பட்ட பொழுது சமிக்கையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டிப்பரின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்பு உள்ளாகி உள்ளது குறித்த சம்பவம் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பி ஓடி உள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
