கியூபெக் அரசின் சட்டத்திற்கு எதிராக, தனியார் மருத்துவர்கள் சங்கம் (FMPPQ) மொன்ட்ரியல் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
புதிய மருத்துவர்கள் அனைவரும் தங்களது முதல் ஐந்து ஆண்டுகளில் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் தான் சேவையாற்ற வேண்டும் என்ற அந்த சட்டத்தை, தனியார் மருத்துவர்கள் சங்கம் எதிர்த்துள்ளது.
2025 ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட ‘பில் 83’ (Bill 83) என்ற சட்டத்தின் மூலம், கியூபெக்கில் மருத்துவப் படிப்பை முடிக்கும் புதிய மருத்துவர்கள், ஐந்து ஆண்டுகள் பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றிய பிறகே, தனியார் கிளினிக்குகளைத் தொடங்க முடியும் என அரசு நிபந்தனை விதித்தது.
இந்த விதியை மீறித் தனியார் துறையில் மருத்துவ சேவையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20,000 டொலர் முதல் 1,00,000 டொலர் வரை மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 80% மருத்துவர்கள் பொதுச் சேவையை விட்டுத் தனியார் துறைக்குச் சென்றுள்ளனர்.
இதனால், கியூபெக் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கியூபெக் அரசு கூறுகிறது.
