குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஒரு முக்கிய விடயத்தை அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள 04 இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈ – கேட் திட்டம் ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த 04 நுழைவாயில்கள் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
