தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கியூபெக்கை கனடாவிலிருந்து பிரிப்பது குறித்த பொது வாக்கெடுப்பை (Referendum) நடத்துவோம் என்று, பார்ட்டி கியூபெக்கோவா (Parti Québécois – PQ) கட்சி அறிவித்துள்ளது.
அந்தப் கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் (PaulSt-Pierre Plamondon), இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோல்ட் (François Legault) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமையை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கியூபெக்கின் இரண்டு முக்கிய கட்சிகள் தற்போது தலைவர்கள் இல்லாத நிலையில் உள்ளன. இது பார்ட்டி கியூபெக்கோவா கட்சிக்குத் தடையற்ற பாதையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
