Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல்

ஜனவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு புதுரார் பிரதேசத்திலுள்ள மதுபானசாலையில் மது அருந்திய குழுவிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரை மதுபான போத்தலிலால் தலையில் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் அமர்ந்திருந்து மதுபானம் அருந்தும் மதுபானசாலையில் கடந்த 9ம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.

அருந்திய மதுபானத்துக்கான பணத்தை அந்த முகாமையாளர் கேட்டபோது அவரை அங்குள்ள முகாமையாளரின் அறைக்குள் சென்று அவர் மீது மதுபானப் போத்தலால் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி பா.உ. கருணைநாதன் இளங்குமரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுப்பு(Video)
அடுத்த செய்தி ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழிலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொடிச்சீலை

மே 30, 2025
இலங்கை

நேபாளத்தில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

செப்டம்பர் 9, 2025
இலங்கை

யாழில். செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?