Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்

ஜனவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி மீது நாம் நம்பிக்கை வைத்துள்ள போதிலும் அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வடமாகாண விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் வடக்குக்கு வருகை தந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தவர்களாகவும்,அவர்களை காணாமல்ஆக்கியும், இடம்பெயரக் காரணமானவர்களாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்பட்டது.

ஆனால் இந்த தலைமுறை ஜனாதிபதிகளின் கொடூரமான முகத்தை பார்க்கவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அத்தகைய கொடூரமான முகம் இருப்பதாக நான் கூறவரவில்லை. இளம் துடிப்பான நல்ல விடயங்களை பேசுகின்ற ஒரு ஜனாதிபதியாக இவர் இருக்கிறார்.

எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஜனாதிபதியின் வடக்கு வருகை குறித்து பத்திரிகைகள் வாயிலாகவே தாம் அறிந்ததுடன், அதிகாரப்பூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

மகிந்தராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் கூட, ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ வடக்குக்கு வரும்போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடும் பண்பு இருந்தது.ஆனால் தற்போதைய அரசு தனது கட்சி உறுப்பினர்களுடன் மட்டுமே ஆலோசனைகளை மேற்கொள்கின்றது.

ஜனாதிபதி மக்களைச் சந்திப்பது வரவேற்கத்தக்கது, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அவர் அறிந்து கொள்ளவேண்டும். இந்த நாட்டை ஒரு முன்னேற்றகரமான திசைக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், தமிழ் மக்களும் ஏனைய இனங்களைப் போல சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான சூழலை எவராவது ஏற்ப்படுத்தினால் அத்தகைய முயற்சிக்குத் தாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும். அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல்
அடுத்த செய்தி கிட்டு ஒரு தனி மனித வரலாறு(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு, கொம்பனி வீதியில் போக்குவரத்து நெரிசல்!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அம்பாறை இறக்காமத்தில் 810 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது…

ஏப்ரல் 16, 2025
இலங்கை

ஐரோப்பிய நாடுகளை கூட்டி வந்து கடலை கூறுபோட்டு விற்கப்போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – நா.வர்ணகுலசிங்கம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு – மாங்குளம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

மே 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?