டொராண்டோ நகரத்தில் சுமார் 25 சென்டிமீட்டர் வரை பனி பெய்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும் பனிப்புயல் காரணமாக டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் நேற்று பெருமளவு பனியில் மூழ்கின.
இந்தப் பனிப்பொழிவு காரணமாக டொராண்டோ நகரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.
டொராண்டோ (TDSB), பீல் (Peel) மற்றும் யார்க் (York) உள்ளிட்ட அனைத்து முக்கிய பிராந்திய கல்வி சபைகளும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தன.
டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேவேளை, பொதுமக்கள் தங்கள் வீட்டு முன்னால் உள்ள நடைபாதைப் பனியை 12 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் டொராண்டோ மாநகராட்சி எச்சரித்துள்ளது.
