முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் இளைய மகன் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ வும் கைதாகியுள்ளார்.
இதன்படி சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
