எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மேலும் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எல்ல – வெல்லவாய வீதியில், ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏனையவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்காலை நகரசபையை சேர்ந்த சிலர் பயணித்த பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில், பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
