வடக்கு கிழக்கில் எந்த நாட்டிற்கும் அனுமதியில்லை இந்தியாவுக்கு மட்டும் தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள் அவர்கள்தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய வல்லமை கொண்ட சக்தியுடைய தொப்புள்கொடி உறவுகள் எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுதர இந்தியா முன்னின்று செயற்படவேண்டும். அதற்காக தமிழ் தலைவர்கள் தங்களது பதவிக்காக நலனுக்காக செயற்படாது மக்களின் நலனுக்காக இந்த விடயத்தை ஆணித்தனமாக வலியுறுத்தவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 வருட நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது இதன்போது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னாரது புகைப்படத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து கட்சி தேசிய அமைப்பாளர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தீவை மையப்படுத்தி ஒரு பூலோக ஆதிக்க அரசியல் போட்டி நீண்ட காலமாக இடம் பெற்றுவருகின்றது. அதில் தமிழ் மக்கள் சிக்குண்டு சிங்கள தேசத்தினால் இனழிப்புக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலே மக்களுக்காக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போரடிக் கொண்டிருந்த போது இந்த விடுதலை போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என இந்த உலக்திற்கு இந்த நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் ஒரு பிழையான விம்பத்தை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துகூறிவந்தனர்.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலம் தமிழர்களுடைய விடுதலை போராட்டம் ஒரு நியாயமான ஒரு போராட்டம் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான போராட்டம் என உலகத்துக்கு எடுத்து கூறியவர் இதன்காரணமாக சந்திரிக்கா ஆட்சியில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் இதே தினத்தில் வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவே மாமனிதர்களுடைய வரலாறு இளம் தலைமுறையினருக்கு கடத்தப்படவேண்டும்.
போராட்டம் இன்னும் மௌனிக்கவில்லை மக்கள் நன்கு அறியவேண்டும் புலம் பெயர்ந்த மக்கள் எமது விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சிங்களதேசம் 2009 உடன் எல்லாம் முடிந்துவிட்டது என கனவு கண்டு கொண்டிருக்கின்றது ஆனால் இல்லை போராட்டம் வீச்சாக்கப்பட்டுள்ளது ஆகவே மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த ஆட்சி மாற்றம் ஊழல் ஒழிப்பு என்ற அடிப்படையில் வந்துள்ளனர் இவர்கள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக மிக மோசமாக செயற்பட்டவர்கள் இந்த அனுர அரசு ஜே.வி.பி யின் முகம். அரசியல் ரீதியில் ஜேவிபி நடைமுறையில் என்.பி.பி அதனால் அரசியல் ரீதியான ஆதிகம் தான் இருக்கின்றது அவர்களது அரசியல் என்பது இந்த ஒட்டுமொத்த நாடும் ஒரு சிங்கள பௌத்த நாடு இதற்காக தொடர்ந்தும் சிங்கள மக்களுக்காக போராடுவோம் என்றடிப்படையில் அவர்கள் தென்பகுதியில் செயற்பட்டுள்ளனர்.
இன்றும் தென்பகுதி மக்களிடம் தமிழ் மக்கள் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் ஆயுதம் தூக்கி அவர்களை அடக்குவோம் என பல கூட்டங்களில் கூறியுள்ளனர் இன்று என்.பி.பி. தலைவராக இருக்கும் ஜனாதிபதி அனுர முள்ளிவாய்கால் யுத்தத்தின் இராணுவத்தினர் தளவு நிலையில் இருந்தபோது தென்பகுதியில் 50 ஆயிரம் இளைஞர்களை சேர்த்து இராணுவத்திற்கு வழங்கி அந்த மக்களை இனப்படுகொலை செய்த முக்கியமான நபர் இந்த அனுர திசாநாயக்க.
மாமனிதர்கள் செய்த தியாகங்களை சாதாரணமாக யோசிக்க கூடாது இந்த இனம் வாழ்வதற்காக எத்தனையே மகான்களை கொடுத்திருக்கின்றோம். தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தில் இருந்து ஒரு நாளும் விடுபடவில்லை யாழில் 3 ஆசனம் ஜே.வி.பி வந்துள்ளது. ஏற்கனவே டக்கிளஸ் அங்கஜன் அரசாங்கத்துடன் இருந்தனர். அந்த வாக்குகள் ஒரு கட்சிக்கு போனதால் தான் 3 ஆசனத்தை ஜேவிபி பெற்றுள்ளது ஆகவே தமிழ் தேசத்துடன் யாழ் மக்கள் இருக்கின்றனர்.
அதே போன்று மட்டக்களப்பிலும் தமிழ் தேசியம் வென்றுள்ளது. எனவே மக்கள் நிதானமாக இருக்கவேண்டும். ஆசாபாசங்களுக்கு முகம் கொடுக்க கூடாது. இந்த மண்ணிலே ஏகப்பட்ட படுகொலைகள் நடந்தேறியுள்ளது. முதலாவது மாமனிதர் குமார் பொன்னம்பலம் அதனை தொடர்ந்து விடுதலைபோராட்டத்தில் மக்கள் மீதும் மண்மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எத்தனையே எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள்.ஆகவே பாரபட்சம் பார்க்காமல் தமிழ் தேசியத்தின் பின்னால் நிற்கவேண்டும் தமிழ் தேசியத்தை கட்டியொழுப்ப வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழர்களுடைய தாயகம் சிங்கள தேசம் கனவு காணலாம். ஒரு நாளும் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்த நாட்டை கட்டியழுப்ப முடியாது அது ஒரு பகல்கனவாக இருக்கும்.
சிங்கள ஊடகவியலலாளர் பிரதீப் எக்கனியகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு பெரியகளம் என அழைக்கப்படும் எருமைதீவில் புதைத்துள்ளதாக ஒரு கடற்படையைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல படுகொலைகள் நடந்தேறியுள்ளது.
இந்த மாவட்டத்தில் பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களை கடத்தி கொன்றுள்ளனர். இந்த உண்மைகள் ஒரு நாள் வெளிவரும் உண்மைகள் வெளிவரவேண்டும் ஊழல்கள் ஒழிக்கப்படவேண்டும். அதற்கு நூறுவீதம் ஒத்துழைப்போம். ஆனால் தமிழ் மக்கள் மீது ஏறிக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நசிக்கி கொண்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஒரு போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த விதத்திலும் அனுமதிக்காது.
வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களுக்கு துரோகங்களையும் பணமோசடிகளையும் செய்து கொண்டு வந்தவர்களை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்ட்ட 760 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. இது தெரிந்தவை தெரியாமல் எத்தனையோ மோசடிகள் நடந்துள்ளது. எனவே மக்களின் பணங்களை சுறுட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்தவர்களுக்கு சரியான பாடத்தை இந்தமுறை மக்கள் வழங்கியுள்ளனர்.
இந்தியா சீனா மற்றும் ஏனைய நாடுகள் இந்த நாட்டை தங்களது ஆதிக்கத்துக்கான போட்டி போய் கொண்டுள்ளது இந்த இடத்தில் தமிழர்கள் நிதானமாக இருந்து சரியான முடிவு எடுக்கவேண்டும் இதில் தமிழ் தலைவர்கள் தங்களது பதவிக்காக நலனுக்காக செயற்படக் கூடாது மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும்.
இந்தியா வெளியுறவு கொள்கையில் இலங்கையை தனது கையில் வைத்து கொள்ள வேண்டும் தமிழர்களை பொறுத்தமட்டில் இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதில் எந்த தயக்கமும் இல்லை ஆனால் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்குரிய தீர்வை இந்தியா செய்யுமாக இருந்தால் நூறுவீதம் இந்தியாவுடன் சேருவோம் இந்தியாவை விட்டு ஒருவரிடமும் போகமாட்டோம் என்றார்.