கொஹுவளை போதியவத்தை பகுதியிலுள்ள ஒரு இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான நால்வரும் கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த குற்றத்திட்கு உடந்தையாக செயற்பட்டவர்களான மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர், துப்பாக்கியைக் கடத்திச் சென்றவர்,துப்பாக்கிக்குப் பொறுப்பாக இருந்தவர் மற்றும் குற்றவாளிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 3 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், 9 மி.மீ ரகத்தின் 10 தோட்டாக்களும், 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் ,50 கிராம் ஹெரோயினும், மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


