பங்களாதேஷில் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியின் இறப்பை தொடர்ந்து பலத்த வன்முறை இடம்பெற்றது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இதில் முகமது லிமோன், முகமது தாரெக், முகமது மாணிக், எர்ஷாத் அலி, நிஜாம் உதின், ஆலோம்கீர், முகமது மிராஜ் ஆகிய 7 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
