நாட்டின் முன்னணி விமான சேவைகளில் ஒன்றான ஏர் ட்ரான்சாட் (Air Transat), அதன் விமானிகளுடன் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
இதன் விளைவாக, அதிகாலை முதல் ஆரம்பிக்கவிருந்த பாரிய வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுமார் 750 விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விமானிகள் சங்கத்துக்கும் ஏர் ட்ரான்சாட் நிறுவன நிர்வாகத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.
விமானிகளின் வேலைநிறுத்தத்தினால் ஆயிரக்கணக்கான பயணிகளின் விடுமுறைக் காலப் பயணத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டியிருந்த சூழ்நிலை முன்னர் காணப்பட்டது.
தற்போது இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் ஆனது, பயணிகளின் விடுமுறைக் காலப் பயணங்கள் மீதான நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
