சீரற்ற காலநிலை நிலவுவதால் தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் மரக்கறிகள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கெரட், லீக்ஸ், கோவா மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலை 2500 ரூபாவிற்கு அதிகமாக விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது இந்த மரக்கறிகளின் மொத்த விலை கிலோவொன்று 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையான விலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
