நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இதன்படி பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களை வெளியேற்றுமாறு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
