இலங்கையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்றையதினம் (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
