இந்தியாவின் புதுடெல்லி கார் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வுத்துறையினர் விசாரணையில், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் ”பெஞ்சமின் நெதன்யாகு” தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,”டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். துயர்மிகு நேரத்தில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்” என
தெரிவித்துள்ளார்.
