உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாயினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்று மாத்திரம் தங்கம் 7000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
