Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விசேட செய்திகள்விளையாட்டு

1xBet தளம் சட்டவிரோதமானது – அமலாக்கத்துறைவசமானது வீரர்கள் மற்றும் பிரபலங்களின் சொத்துக்கள்!

நவம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

இதன்படி, ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபா மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்புடைய 6.64 கோடி ரூபா மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அடங்கும்.

பந்தயத் தளத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த வீரர்கள் விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெய்னா மற்றும் தவான் தவிர்த்து யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவிடமிருந்தும் இது தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரபல நடிகர் சோனு சூட், முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இந்தத் தளம் (1xBet) சட்டவிரோதமானது என்று தெரிந்தும் வீரர்கள் இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டிருப்பது சர்ச்சைக்குரியது என கூறப்படுகிறது.

சட்டவிரோத ஆன்லைன் பந்தய நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் அமலாக்கத்துறை, இந்த தளத்தை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வருகிறது.

இந்த விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருமானம், பணமோசடி செய்யப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தவிர்த்து மேலும் சில நாடுகளில் இத்தளத்தை பயன்படுத்தும் இதனுடன் தொடர்புடைய அனைவரது சொத்துக்களும் முடக்கப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் ஆதரவு!
அடுத்த செய்தி தேசிய நினைவகத்தை திறந்த கனடாவின் சீர்திருத்த சேவை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்திவைப்பு!

ஜூலை 15, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 30, 2025
விளையாட்டு

IPL போட்டியின் டிக்கெட்டுக்களுக்கான விலை உயர்வு!

செப்டம்பர் 4, 2025
இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?