சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வரும் ஒரு பரபரப்பான காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை கருத்தை வெளியிட்டுள்ளது.
டொராண்டோ பொலிஸ் அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போது, ஒரு பொலிஸ் வாகனம் “தற்செயலாக” ஒரு பெண் சந்தேகநபர் மற்றும் கைது செய்யும் அதிகாரி மீது ஏறுவதை, அந்த காணொளி காட்டுகிறது.
ஜேன் தெரு மற்றும் எக்லின்டன் அவென்யூ வெஸ்ட் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததை டொராண்டோ பொலிஸ் சேவை (TPS) உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்தில் 23 வயதுடைய சந்தேகநபர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


