மொன்ட்ரியல் நகரின் அடுத்த மேயராக என்சம்பிள் மொன்ட்ரியால் கட்சியின் தலைவர் சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா (Soraya Martinez Ferrada) தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய மேயர் வலேரி ப்ளாண்டிற்குப் பிறகு, நகரின் இரண்டாவது பெண் மேயர் எனும் பெருமையை சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா (Soraya Martinez Ferrada) பெறவுள்ளார்.
இவர் 1980 ஆம் ஆண்டில் தனது எட்டு வயதில் சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட்டின் ஆட்சியில் இருந்து தப்பி, அரசியல் அகதியாக மொன்ட்ரியாலுக்கு வந்தார்.
மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
நகராட்சி அரசியலில் ஈடுபடுவதற்காக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மத்திய அரசில் தாம் வகித்து வந்த பதவியை, சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா ராஜினாமா செய்தார்.
அனைவருக்கும் வீடுகள் கிடைப்பதை உறுதிப்படுத்துதலை அவர் தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

