கியூபெக் அரசுக்கும் குடும்ப மருத்துவர்கள் கூட்டமைப்பிற்கும் (FMOQ) இடையே நிலவி வந்த நீண்ட கால மோதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
‘பில் 2’ (Bill 2) எனப்படும் சர்ச்சைக்குரிய சட்டத்தில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ள இரு தரப்பும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த புதிய ஒப்பந்தத்திற்கு கியூபெக் மாகாணத்தில் உள்ள 97 சதவீத மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலக்குகளை அடையாத மருத்துவர்களுக்கு விதிக்கப்படவிருந்த அபராதங்கள் மற்றும் கட்டாயப் பணி முறைகள், இந்த ஒப்பந்தத்தில், ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஒப்பந்தம் மூலம், வரும் ஜூன் 2026-க்குள் கூடுதலாக 5 லட்சம் புதிய நோயாளிகளுக்கு குடும்ப மருத்துவர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசின் கடுமையான நிபந்தனைகளால் பல மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறப்போவதாக எச்சரித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் கியூபெக் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
