ஓராண்டுக்கு முன்னர் எடோபிகோ (Etobicoke) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், இரண்டாவது நபராக மைக்கேல் ஜோன்ஸ் என்ற 61 வயதுடைய நபரை டொராண்டோ காவல்துறை கைது செய்துள்ளது.
ஜெஸ்ஸி கிறிஸ்டியன் ஹால்வர்சன் (Jesse Christian Halvorsen) என்பவரின் கொலையில் இவர் பங்கு வகித்ததாகக் கூறி, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 12, அன்று அதிகாலை 6 மணியளவில் லேக் ஷோர் பொலிவார்ட் மற்றும் இஸ்லிங்டன் அவென்யூ (Lake Shore Boulevard and Islington Avenue) பகுதியில் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் ஏற்கனவே, டொராண்டோவைச் சேர்ந்த ஷான் டவுன்ஸ்-அபோட் (Shawn Downs-Abbott) என்ற 35 வயதுடைய நபர், சம்பவத்திற்கு மறுநாள் கைது செய்யப்பட்டு, அவர் மீதும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
