Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிகம லசந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது!

அக்டோபர் 26, 2025
படிக்க 2 நிமிடங்கள்
Outlaw's hands locked in handcuffs isolated on black
SHARE

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் காலியில் வெலிகம பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நான்கு சந்தேகேநபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் சந்தேகநபர் ஒருவர் தப்பி சென்றுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087

இதேவேளை, குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடையூறு விளைவித்த இராணுவத்தினர்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைவிசேட செய்திகள்

யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா பாதிப்பு உறுதி…

ஏப்ரல் 26, 2025
இலங்கை

யாழில்.நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள்

மார்ச் 12, 2026
இலங்கை

அர்ச்சுனா எம்பியும் சிறைசெல்ல நேரிடும் – இளங்குமரன் எச்சரிக்கை!

அக்டோபர் 3, 2025
1
இலங்கை

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது…

மார்ச் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?