இஷாரா செவ்வந்தி தப்பிப்பதற்கு உதவியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்கள் 27 பேருக்கும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பூஸா சிறைச்சாலையில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்கள் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
