அண்மையில் கனடாவில் நடைபெற்ற மத்திய பொதுத் தேர்தலில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட கியூபெக்கின் டெர்ரெபோன் (Terrebonne) தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
கடந்த ஏப்ரல் 28-ல் நடந்த தேர்தலில், நீதித்துறை மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, Liberal கட்சி வேட்பாளர் டாட்டியானா ஆகஸ்ட் (Tatiana Auguste) ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற பிளாக் கியூபெக்வா வேட்பாளரான சின்க்ளேர்-டெஸ்கேக்னே-ஐ விட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலை இரத்து செய்துவிட்டு புதிய தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று, தோல்வியுற்ற பிளாக் கியூபெக்வா (Bloc Québécois – BQ) கட்சியின் முன்னாள் வேட்பாளர் நாடாலி சின்க்ளேர்-டெஸ்கேக்னே (Nathalie Sinclair-Desgagné) கோரியுள்ளார்.
கனடா தேர்தல் ஆணையத்தின் (Elections Canada) நிர்வாகப் பிழை காரணமாகவே இந்த முடிவு வந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பிழையை ஒப்புக்கொண்டாலும், மறுவாக்கு எண்ணிக்கையை இரத்து செய்ய சட்ட அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.
