மொண்ட்ரீயல் நகரத்தின் கோட்-டெஸ்-நெய்ஜெஸ்–நோட்ரே-டேம்-டி-க்ரேஸ் (Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce) பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் உயிரிழந்ததாக மொண்ட்ரீயல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பின் உள்ளே சென்றபோது, மயக்க நிலையில் இருந்த ஒருவரை மீட்டுள்ளனர்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
